'தளபதி 67' படத்தின் டெக்னீஷியன்கள் இவர்கள் தான்: செம ஆச்சரியத்தில் 'விக்ரம்' குழுவினர்!

தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ’வாரிசு’ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணையாக இருக்கிறார் என்பதும் ’தளபதி 67’ என்ற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ’தளபதி 67’ படத்திலும் லோகேஷின் முந்தைய படங்களின் தாக்கம் இருக்குமா? அல்லது தனித்துவமான படம் இருக்குமா? என்ற கேள்விக்கு இன்னும் ரசிகர்களுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவரது படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்டவர்கள் 'தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த டெக்னீசியன்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது .அந்த தகவல் என்னவெனில் ‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த அனைத்து டெக்னீசியன்களும் ’தளபதி 67’ படத்திலும் பணிபுரிய உள்ளார்கள் என்பது தான்.

‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளர் அனிருத், படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் உள்பட அனைத்து டெக்னீசியன்களும் ’தளபதி 67’ படத்திலும் பணிபுரிய இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் எடுத்த இந்த முடிவு ‘விக்ரம்’ டெக்னீசியன் குழுவினருக்கு செம ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெங்கட்பிரபுவுடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன்: அடுத்த படத்தில் இணைகிறார்களா?

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 11வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

சூர்யாவை அடுத்து கேமியொ ரோலில் விஜய்? எந்த படத்தில் தெரியும?

நடிகர் சூர்யா சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் என்பதும், ஐந்து நிமிடமே அவரது காட்சிகள் இருந்தாலும் அந்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் மாஸ் ஆக இருந்தது

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த இலக்கு தளபதி விஜய்யா?

தமிழ் திரையுலகில் 'எல்கேஜி' 'மூக்குத்தி அம்மன்' மற்றும் '  வீட்ல விசேஷம்' ஆகிய வெற்றி படங்களை கொடுத்த ஆர்ஜேபாலாஜி அடுத்ததாக விஜய்க்கு கதை கூறியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்

'வீட்ல விசேஷம்' படத்தை கலாய்த்த புளூசட்டை: பதிலடி கொடுத்த பச்ச சட்டை பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் திரையரங்குகளில் குவிந்து

அமெரிக்காவில் இருந்து திரும்புகிறாரா சிம்பு? 'பத்து தல' படப்பிடிப்பு எப்போது?

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படத்தின் முக்கிய