லோகேஷ் கனகராஜின் 'ஃபைட் கிளப்': சிறுவர்கள் பார்க்க முடியாத படமா? சென்சார் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]


பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு திரைப்படம் ‘ஃபைட் கிளப்’ வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘ஃபைட் கிளப்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதால் இந்த படத்தை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பார்க்க முடியாத பலமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 137 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 17 நிமிடங்கள் என்றும் சென்சார் சான்றிதழில் இருந்து தெரிய வருகிறது.

'உறியடி' விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'டாடா' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோவாக தொகுப்பாளர்.. ஹீரோயின் யார்?

கவின் நடித்த 'டாடா' திரைப்படம்  கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்: தனுஷ் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

 இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தளபதி பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான

நாளை ரஜினி பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்தளிக்கும் லைகா..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தலைவர் 170'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

பூர்ணிமாவிடம் சரியாக பேசாதது ஏன்? இந்துஜா கூறிய காரணம்..!

நடிகை இந்துஜா சமீபத்தில் 'பார்க்கிங்' பட ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது தனது கல்லூரி தோழியான பூர்ணிமாவிடம் சரியாக பேசவில்லை. இது குறித்து பூர்ணிமாவும் மாயாவிடம் தனது ஆதங்கத்தை

இவங்க எல்லாம் 'சலார்' படத்தை பார்க்க முடியாது: ஷாக்கிங் சென்சார் சான்றிதழ்..!

 பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம்  டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட பான் இந்திய திரைப்படமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது