லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு.. அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

ஐந்து படங்களை மட்டுமே இயக்கிய லோகேஷ் கனகராஜ் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிறுவனத்தின் மூலம் அவர் தனது உதவியாளர்களுக்கும் நண்பர்களுக்கும் வாய்ப்பளிக்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு திரைப்படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் முதல் திரைப்படத்திற்கு ஃபைட் கிளப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகனாக உறியடி விஜயகுமார் நடிக்கவிருக்கும் நிலையில் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உரியடி, உறியடி 2 ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு விஜயகுமாருக்கு இந்த படம் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாஸ் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

சூர்யாவின் அடுத்த படம் இரண்டு பாகமா? வைரலாகும் தகவல்கள்..!

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஆப்பிரிக்கா காட்டுப்புலி': 'ஆளவந்தான்' படத்தின் இன்னொரு மாஸ் பாடல் ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில்

என் படத்தை பீரிசரில் வைத்து உயிரோடு அஞ்சலி செய்துவிட்டார்கள்: அறிமுக இயக்குனர் ஆதங்கம்..!

நான் இயக்கிய திரைப்படத்தை பிரீசரில் வைத்து உயிரோடு   ஆணி அடித்து அஞ்சலி செய்து விட்டார்கள் என அறிமுக இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

விஷ்ணுவுக்கு குப்பைத்தொட்டியை தூக்கி காட்டிய அர்ச்சனா.. ஏளனமாக பார்த்து ரசிக்கும் மாயா..!

விஷ்ணு மற்றும் அர்ச்சனா இன்று காலை முதல் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் குப்பைத்தொட்டியை எடுத்து விஷ்ணுவின் முகத்தில் அர்ச்சனா காட்டிய போது,

போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது:  அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய சசிகுமார்

'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜாவின் அறிக்கையோடு இந்த பிரச்சனையை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சசிகுமார் வெளியிட்டுள்ள