close
Choose your channels

LCUவுக்கு 'பிள்ளையார் சுழி' போட்ட லோகேஷ் கனகராஜ்.. ஒரே படத்தில் 4 படங்களின் கேரக்டர்கள்..!

Friday, May 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் உள்ள கேரக்டர்களை வைத்து LCU குறும் படங்களை இயக்கி வருவதாகவும் இந்த குறும்படங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அவர் ’கூலி’ படத்தின் பணிகளில் பிஸியாக இருப்பதால் LCU குறும்படங்கள் குறித்த செய்திகள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது LCU குறும்படங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் முதல் குறும்படமாக ’பிள்ளையார் சுழி’ என்ற டைட்டிலில் வெளியாக இருப்பதாகவும் இந்த குறும்படம் மிக விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

இந்த குறும்படம் வெளியீட்டிற்கான செய்தியாளர் சந்திப்பு வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாகவும் அப்போது இந்த குறும்படம் குறித்த சில விவரங்களை லோகேஷ் கனகராஜ் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம், லியோ, கைதி படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட சில கேரக்டர்கள் இந்த குறும்படத்தில் இருப்பதாகவும், இந்த குறும்படத்தை 15 முதல் 20 நாட்களில் அவர் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்தடுத்து வரும் அவரது குறும்படத்தில் விக்ரம், ரோலக்ஸ், டில்லி, லியோ போன்ற கேரக்டர்களும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் லோகேஷ் கனகராஜின் குறும்படங்களை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment