ஒரிஜினல் LCU இதுதான்.. 'கைதி 2' ரிலீசுக்கு முன் லோகேஷின் மாஸ் திட்டம்..!

  • IndiaGlitz, [Wednesday,December 13 2023]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே LCU காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். ’லியோ’ படத்தில் கூட LCU இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜார்ஜ் கேரக்டர் மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ’கைதி 2’ படம் ஒரிஜினல் LCU படமாக இருக்கும் என்று நடிகர் நரேன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் கனகராஜ் உடன் இணைந்து நாங்கள் பத்து நிமிட குறும்பட வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளோம் என்றும் ’கைதி 2’ ரிலீசுக்கு முன்னர் அந்த குறும்படம் வெளியாகும் என்றும் ஓடிடி அல்லது யூடியூபில் அந்த வீடியோவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் ஒரிஜினல் LCU என்று சொல்லும் அளவுக்கு அந்த வீடியோ இருக்கும் என நடிகர் நரேன் அந்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில் விக்ரம், கைதி, லியோ படத்தின் கேரக்டர்களின் LCU காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அந்த பத்து நிமிட வீடியோ எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘லியோ’ படத்திற்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'அயலான்' கேரக்டருக்கு குரல் கொடுத்தது இந்த பிரபல நடிகரா? கசிந்த ரகசியம்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக்கில் ஆபாச வீடியோக்கள்? என்ன ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த தளத்தில் ஆபாச வீடியோக்கள் உட்பட பல விஷயங்கள் பகிரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  

முதல் சீசனை அடுத்து 7வது சீசனில் தான்.. சுவர் ஏறி குதிக்க முயன்ற போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக இருந்த பரணி சுவரேறி குதிக்க முயன்ற நிலையில் அதன் பிறகு ஏழாவது சீசனில் ஒரு போட்டியாளர் சுவரேறி  குதிக்க முயன்ற  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் 3 ஹீரோயின்கள்.. அதில் ஒருவர் தமிழ் நடிகை.. கதை இதுவா?

பிரபல கன்னட நடிகர் யாஷ், 'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு படங்கள் மூலம்  உலக புகழ் பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் 'டாக்ஸிக்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் எ

நிக்சன், விஷ்ணுவுடன் மாறி மாறி ஆட்டம் போடும் பூர்ணிமா.. வேற லெவல் டான்ஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும், கடந்த சீசன்கள் போல் இந்த சீசன்  பார்வையாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.