close
Choose your channels

ரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா?

Tuesday, December 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டால் அதன் பின்னர் உச்சத்துக்குச் சென்று விடலாம் என்பது இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களின் நிலையாக உள்ளது.

அதன்படி மாநகரம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ‘கைதி; படம் ரிலீசாக முன்னரே அவர் தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 64’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே பட வெற்றியால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் பெற்றது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை போயஸ் இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்குனர் லோகேஷ் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ள நிலையில் ரஜினியை லோகேஷ் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை அவர் இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.