லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’கைதி’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து தற்போது அவர் இயக்கி முடித்துள்ள தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படம் ரிலீஸானால் லோகேஷ் கனகராஜ் உச்சகட்ட புகழ் அடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும், கமல்ஹாசன் தயாரிப்பில் அவரே நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும், தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை மாலை 6 மணி மணிக்கு வெளியிடுவதாக அறிவித்து உள்ளார். இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா? அல்லது கமல்ஹாசன் நடித்து தயாரிப்பாரா? என்பதை நாளை மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நான்கு வரி வசனத்தை ஒரு நிமிடத்தில் மனப்பாடம் செய்ய வேண்டுமா? விக்ரம் பட நடிகர் வெளியிட்ட காமெடி வீடியோ 

விக்ரம் நடித்துவரும் 'கோப்ரா' திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் நான்கு வரி வசனத்தை ஒரே நிமிடத்தில் மனப்பாடம் செய்ய இயக்குனர் அஜய் ஞானமுத்து வற்புறுத்தினார்

ஆப்பிள் வாட்சுக்கு பதில் கற்கள்: பிரபல இசையமைப்பாளருக்கு ஆன்லைன் நிறுவனம் அளித்த பதில்!

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் தனது சகோதரருக்கு பரிசளிக்க ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த நிலையில் அந்த பார்சலில் வெறும் கற்கள் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் 

விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்: ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கைகள் நடத்தும் உணவகம்… மக்கள் மத்தியில் வரவேற்பு!!!

கோவை ஆர்எஸ் புரத்தில் திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உணவகம் ஒன்றை ஆரம்பித்து இருக்கின்றனர்.

வெள்ளி கிரகத்தில் உயிரினமா… பரபரப்பை ஏற்படுத்தும் புதுத்தகவல்!!!

வெள்ளி கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்குத் தேவையான பாஸ்பீன் வாயு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.