close
Choose your channels
evp_raaga
kappan_us

இதுவரைக்கும் பார்க்காத விஜய்க்கு நான் கியாரண்டி: லோகேஷ் கனகராஜ்

Thursday, September 12, 2019 • தமிழ் Comments

விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள ’தளபதி 64’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின்போது தளபதி 64 படம் குறித்த சில குறிப்புகளை கூறியுள்ளார் 

இதுகுறித்து அவர் கூறியதாவது: ’தளபதி 64’  படத்தை பற்றி தற்போது நான் பேசுவது சரியாக இருக்காது. இது ரொம்ப சீக்கிரம் என்று நினைக்கின்றேன். இந்த படத்தை பற்றியோ அல்லது இந்த படம் எந்த மாதிரியான ஜானர் படம் என்பதை பற்றியும் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு என்னால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இதுவரைக்கும் பார்க்காத விஜய்யையும் பார்க்காத விஜய் படமாகவும் இந்தப் படம் இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி என்று கூறியுள்ளார் 

இந்த நிலையில் விஜய்64 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியலை இறுதி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 

Get Breaking News Alerts From IndiaGlitz