close
Choose your channels

'ரோலக்ஸ்' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. 'கூலி'க்கு அடுத்து என்ன படம்? லோகேஷ் கனகராஜ்

Friday, May 2, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சூர்யா ’ரோலக்ஸ்’ ரோலக்ஸ் படம் எப்போது, ’கூலி’ படத்திற்கு பின்னர் அடுத்த படம் என்ன என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. மேலும், நேற்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், "சூர்யாவுடன் ’ரோலக்ஸ்’ என்ற படம் கண்டிப்பாக உள்ளது. ஆனால் அது எப்போது என்பது குறித்து எனக்கு தெரியாது. சூர்யாவின் கமிட்மெண்ட் மற்றும் என்னுடைய கமிட்மெண்ட் ஆகியவற்றை பொறுத்து தான் அந்த படம் எப்போது உருவாகும் என்று கூற முடியும்," என்றார்.

அதே நேரத்தில், 'கூலி'க்கு அடுத்த படம் 'கைதி 2' தான் என்பதையும் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment