'தளபதி 67' அப்டேட் எப்போது? லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வ தகவல்

  • IndiaGlitz, [Wednesday,January 25 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து தற்போது கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து காஷ்மீரில் அடுத்த கட்ட படபிடிப்பு நடைபெறும் என்றும் இதில் விஜய், சஞ்சய் தத் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்களை உள்ளன.

இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைய இருக்கும் நிலையிலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்னும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகவும் ஏக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் ’வாரி’சு படம் ரிலீசானவுடன் ’தளபதி 67’ படத்தின் அப்டேட் வரும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் லலித் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி முதல் வாரம் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வரும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’தளபதி 67’ படத்தின் டீசரும் பிப்ரவரி முதல் வாரமே வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இனி அடுத்தடுத்து ’தளபதி 67 ’படத்தின் அப்டேட்டுகள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

தமிழ்சினிமாவில் ஒரு அலையை உருவாக்கிய  'அயலி' 

சர்வதேச கல்வி தினத்தில், ஜீ5 உடைய  தமிழ் ஒரிஜினல் தொடரான 'அயலி' - தமிழ்சினிமாவில் ஒரு அலையை உருவாக்கி இருக்கிறது!

1000 திரையரங்குகளில்  'ஆளவந்தான்': கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு

கமலஹாசன் நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார். 

4 மணிநேரம் கழித்து தான் என் கையில் கொடுத்தார்கள்: 20வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு

 நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி குஷ்பூ தனது மகளின் 20வது பிறந்தநாளுக்காக தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

டைட்டில் வின்னருக்கு தகுதியானவர்தான்: சொன்ன வாக்குறுதியை காப்பாற்றும் அசீம்..!

 பிக் பாஸ் வீட்டில் அசீம் குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் தோன்றினாலும் அவர் கடைசி நேரத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார்.

நடிகர் பார்த்திபன் சற்றுமுன் திடீரென மரணம்.. வதந்தி செய்திக்கு பார்த்திபனே அளித்த விளக்கம்!

திரை உலகை சேர்ந்தவர்கள் திடீரென மரணம் அடைந்து விட்டதாக வதந்தி பரப்புவதற்கு என்றே ஒரு குரூப் இருக்கிறது, குறிப்பாக யூடியூபில் திடீர் திடீரென பல நடிகர்களின் மரணம் குறித்த வதந்தி கிளம்பும் என்பது