close
Choose your channels

அடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்

Saturday, January 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா உலகம் முழுவதும் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளன என்பதும் பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்தை பாராட்டி அதிக ஸ்டார்கள் கொடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடதக்கது.

இருப்பினும் ஒருசில ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த படத்தில் உள்ள குறைகளையும் எடுத்துக் கூறியுள்ளனர். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறியபோது ’விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ‘மாஸ்டர்’ படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களை என்னால் புரிந்து கொள்கிறது. அதனை ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய அடுத்த படத்தில் அந்த விமர்சனங்கள் வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

நெகட்டிவ் விமர்சனம் செய்பவர் மீது கோபப்படும் திரையுலகில் இளம் இயக்குனர் ஒருவர் நெகட்டிவ் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று முதிர்ச்சியாக கூறியிருப்பது அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.