வெறும் 50 ஆயிரம் ரூபாயில் சின்மயி பிரச்சனையை முடித்த லோகேஷ் கனகராஜ்.. எப்படி தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

வெறும் 50 ஆயிரம் ரூபாயில் சின்மயி குறித்த பிரச்சனையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் டப்பிங் யூனியன் சங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த போது ’பாடகி சின்மயி டப்பிங் சங்கத்தில் தற்போது உறுப்பினராக இல்லை என்றும் ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படத்தில் த்ரிஷாவுக்காக அவர் டப்பிங் பேசினார் என்றும் நான் டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால் இது குறித்து விசாரணை செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லாத ஒருவரை ஒரு திரைப்படத்தில் பயன்படுத்த வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட தொகையை டப்பிங் யூனியனுக்கு செலுத்தி அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது என்பதை லோகேஷ் கனகராஜ் அறிந்தார்.

இந்த விதியின்படி ’லியோ’ படத்தில் த்ரிஷாவுக்காக டப்பிங் பேச சின்மயி அழைக்கப்பட்ட நிலையில் அவருக்காக லோகேஷ் கனகராஜ் ரூபாய் 50 ஆயிரத்தை டப்பிங் யூனியனில் செலுத்திவிட்டாராம். இதனை டப்பிங் யூனியன் சங்க நிர்வாகிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.

சின்மயி பிரச்சனையை வெறும் 50 ஆயிரம் ரூபாயில் முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ், இந்த பணத்தை தயாரிப்பாளரிடம் கூட கேட்காமல் அவரே தனது கையில் இருந்து செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

என்னால் 20 நிமிடம் கூட இருக்க முடியவில்லை.. அவர் எப்படி 11 வருடங்கள் இருந்தாரோ? பிரபல இயக்குனர்..!

சாவர்க்கர் இருந்த சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை என்றும் அவர் எப்படி 11 வருடங்கள் அந்த சிறையில் இருந்தார் என்றே தெரியவில்லை என்றும் சாவர்க்கர் வாழ்க்கை

அந்த பக்கம் ராமர் கோவில், சசிகலா.. இந்த பக்கம் ஸ்டாலின், கீ வீரமணி.. எல்லா பக்கமும்  ரவுண்டு கட்டும் ரஜினி..!

ஒரு பக்கம் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சென்ற ரஜினிகாந்த், அதனை அடுத்த சில நாட்களில் சசிகலாவின் புதிய வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த முறை சிறப்பு தோற்றத்தில் யாரும் கிடையாது: பிரபல ஹீரோவிடம் கதை கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்து ஒரு எம்பி.. பாரதிய ஜனதா கட்சியின் மாஸ் திட்டம்..!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளில் திரை உலகை சேர்ந்தவர்கள் இணைந்து வரும் காட்சியையும், அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படு

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை.. தயாரிப்பாளர் குறித்து அமீர்..!

டெல்லியில் ரூபாய் 2000 கோடி போதை மருந்து கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் இந்த சம்பவத்திற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தம் உண்டு என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக