இன்று ஒரே நாளில் லோகேஷ் கனகராஜின் 2 படங்கள் ஆரம்பம்.. மாஸ் தகவல்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’கூலி’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் அவரது இரண்டு படங்கள் ஆரம்பம் ஆகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதலாவதாக லோகேஷ் கனகராஜ் கதை எழுதிய ’பென்ஸ்’ என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
ராகவா லாரன்ஸ், நிவின் பாலி மற்றும் மாதவன் ஆகியோர் லோகேஷ் கனகராஜின் LCUவில் இன்று முதல் இணைகின்றனர் என்பதும், இந்த படத்தை பாக்கியராஜா கண்ணன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் அபிநயங்கர் இசையில் உருவாகி வரும் இந்த படம் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
அதேபோல், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும், இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இந்த பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகிய இரண்டு ஆக்சன் இயக்குனர்கள் ஒன்று சேரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments