'கோட்' படத்தின் டெக்னாலஜியை பயன்படுத்தும் லோகேஷ்.. வேற லெவலில் 'தலைவர் 171'

  • IndiaGlitz, [Saturday,February 03 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘தலைவர் 171’ படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் அவரை இளமையாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது. இதற்காக விஜய் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இதே டெக்னாலஜியை லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் ரஜினியை இந்த படத்தில் இளமையாக காண்பிக்க அவர் இந்த டெக்னாலஜியை கையில் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ‘தலைவர் 171’ திரைப்படத்தில் ரஜினியை இளமையாக பார்க்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

 

More News

'பிகில்' பாண்டியம்மாளின் திருமண நிச்சயதார்த்தம்.. வைரல் புகைப்படங்கள், வீடியோ..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படத்தின் இசை வெளியீடு..!

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'லவ்வர்'. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நான் உயிரோடு தான் இருக்கிறேன்.. சாகவில்லை.. வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே

நடிகை பூனம் பாண்டே நேற்று கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக காலமானார் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வந்த நிலையில் இன்று அவர் திடீரென தான் உயிரோடு இருக்கிறேன்

புதிய திரை அனுபவத்தை தரவிருக்கும் 'ஒரு நொடி' திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்..!

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் 'ஒரு நொடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று  வெளியிட்டார்.

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ்ப்படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.