close
Choose your channels

விஜய்யின் 'லியோ': லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

Friday, February 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துவரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் தற்போது கடும்குளிர் இருந்த போதிலும் விஜய் உள்பட அனைத்து நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் முழு ஒத்துழைப்பு தருவது தந்து வருவதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகிவரும் நிலையில் சற்றுமுன் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் விஜய், லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன் உள்பட படக்குழுவினர் உள்ளனர். இரவு நேரத்தில் நெருப்பில் குளிர் காயும் இந்த புகைப்படம் அட்டகாசமாக இருப்பதை எடுத்து லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.