காமெடி நடிகர் சேஷு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Tuesday,March 26 2024]

கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் ’லொள்ளு சபா’ சேஷு சற்றுமுன் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சேஷு இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக பாரிஸ் ஜெயராஜ்', 'டிக்கிலோனா', 'குலு குலு' ஆகிய படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படத்திலும் நடித்தார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷு இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 8 மணிக்கு சென்னையில் அவருடைய இறுதி சடங்கு நடைபெறும் என்று அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

பலருக்கும் உதவி செய்யும் குணம் கொண்ட சேஷு, பல குடும்பங்களுக்கு அவர் தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கிறார் என்றும் மேலும் அவர் பல ஏழை எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் என்றும் தெரிகிறது. அவருடைய மறைவு திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

'தளபதி 69' இயக்குனர் பட்டியலில் இன்னொருவர்.. விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் 'தளபதி 69' திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த படத்தை இயக்கும்

துல்கருக்கு பதில் சிம்பு ஓகே.. ஜெயம் ரவிக்கு பதில் இந்த பிரபல நடிகரா? 'தக்லைஃப்' புதிய அப்டேட்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் இருந்து திடீரென துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக கூறப்படும் நிலையில்

இளையராஜாவை அடுத்து அவருடைய நண்பரின் பயோபிக் திரைப்படம்.. பிரபல இயக்குனர் தகவல்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு 'இளையராஜா' என்ற டைட்டிலில் உருவாக உள்ளது என்பதும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளார்

என் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா கொடு மாமா.. விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' டிரைலர்..!

விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா 2 கமர்ஷியல் இயக்குனர்களின் படங்கள்.. ரசிகர்களுக்கு குஷி..!

தமிழ் சினிமாவின் 2 வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது சினிமா ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.