close
Choose your channels

துப்பறிவாளனால் புத்துயிர் பெற்றதா ஆயிரத்தில் இருவர் ?

Sunday, September 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த வினய்யின் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த 'ஆயிரத்தில் இருவர்' திரைப்படம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது

கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் இடையிடையே ஒருசில பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிப் போடப்பட்டு பின்னர் ஒருவழியாக 2014ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக கிடப்பில் இருந்த இந்த படத்திற்கு தற்போது விடிவுகாலம் வந்துள்ளது. ஆம் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு வேடங்களில் வினய் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்ரிகா, ஸ்வஸ்திகா, மயில்சாமி, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை அஜித்தின் 'அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கிய சரண் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.