close
Choose your channels

ராமர் திலகமிட்டு பக்தியை வெளிப்படுத்திய தமிழ் நடிகை!

Wednesday, August 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்வை இன்று உலகமே திரும்பி பார்த்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராமர் கோவிலுக்கு இன்று அடிக்கல் நாட்டியதை அடுத்து பல பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ராமபிரான் படங்களை தங்கள் சமூக வலைத்தளத்தின் டிபி ஆக பல பிரபலங்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட உடன் அந்த கோவில் எப்படி இருக்கும் என்கிற டிசைன் கொண்ட புகைப்படங்களும் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய ராமர் பக்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் நடிகை சுகன்யா தனது நெற்றியில் ராமர் உருவத்தையே பொட்டாக வைத்து தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். ராமர் பொட்டுடன் கூடிய சுகன்யாவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

பாரதிராஜாவின் ’புதுநெல்லு புதுநாத்து’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்பட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை சுகன்யா என்பதும் அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.