close
Choose your channels

கவினுக்கு கண்ணாடி பதிலடி கொடுத்தது உண்மையா? லாஸ்லியா விளக்கம்

Saturday, May 16, 2020 • தமிழ் Comments

சமீபத்தில் கண்ணாடி முன் செல்பி எடுத்துக் கொண்ட கவின் மற்றும் லாஸ்லியா ஆகியோர் சமூக வலை தளங்கள் மூலமே மோதி கொண்டதாக செய்திகள் பரவியது. முதலில் கவின் தனது சமூக வலைத்தளத்தில் கண்ணாடி முன் நின்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டு அதில் ’எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வைத்து கொண்டால் எப்போதாவது உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து சில மணி நேரங்களில் லாஸ்லியாவின் சமூக வலைப்பக்கத்தில் அதேபோன்று கண்ணாடி முன் நின்று செல்பி எடுத்த ஒரு புகைப்படம் ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதில் வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முந்தைய அனுபவத்தில் உள்ள தவறுகளை நாம் புரிந்து திருத்தி கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து கவினின் கண்ணாடி செல்பிக்கு லாஸ்லியாவின் கண்ணாடி செல்பி பதிலடி கொடுத்ததாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் செய்தி பரவியது.

இந்த நிலையில் இதுகுறித்து லாஸ்லியா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் பதிவு செய்யும் கருத்துக்கள் அனைத்துமே என்னைப் பற்றியது தான். இதுல நான் போடுற கேப்சர் மற்றும் புகைப்படங்கள் எல்லாமே என்னைப் பற்றியது தான். என்னை பற்றி மட்டுமே ஆகும். எனவே அதன் பின்னணியில் யாரும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

லாஸ்லியாவின் இந்த விளக்கத்தை அடுத்து கவின் மற்றும் லாஸ்லியா இடையே எந்தவிதமான மோதலும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz