'லவ் டுடே' இந்தி ரீமேக்கில் நடிக்கும் இருவருமே பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகளா?

  • IndiaGlitz, [Thursday,May 25 2023]

பிரதீப் ரங்கநாதன் நடித்த இயக்கிய ’லவ் டுடே’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கக் கூடிய நட்சத்திரங்கள் தகவல்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கேரக்டரில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் நடிக்க இருப்பதாகவும் அதே போல் இவானா கேரக்டரில் ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ ’லால் சிங் சத்தா’ ஆகிய படங்களை இயக்கிய அத்வைத் சந்தன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை செய்த ’லவ் டுடே’ திரைப்படம் ஹிந்தியிலும் சூப்பர் ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தளபதி 69' படத்தை இயக்க போவது 'லியோ' நடிகரா? பரபரப்பு பேட்டி..!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் 'தளபதி 68' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை

'தளபதி 68' படத்தின் பூஜை இந்த தேதியிலா? ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை நடைபெறும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. 

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்.. சிவகார்த்திகேயன் படத்துடன் மோதலா?

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது தான் இந்த படம் ரிலீஸ் தேதியை நோக்கி நெருங்கி

234 தொகுதிகள்: ஜூனில் தளபதி விஜய்யின் பிரமாண்ட திட்டம்..!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்திக்க தளபதி விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த இளம் நடிகரா? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

கவின் நடித்த 'டாடா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வசூலை குவித்தது என்பதும் அதேபோல் ஓடிடியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது