LPG  கேஸ் சிலிண்டர் விலையில் ரூ. 65 வரை குறைப்பு!!!

  • IndiaGlitz, [Wednesday,April 01 2020]

 

மத்திய அரசு ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 LPG கேஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கிவருகிறது. இந்த மானிய விலைக்குறைப்பானது அன்னியச் செலவாணி, சர்வதேச சந்தையில் எல்.பி.ஜியின் விலைகுறைப்பைப் பொறுத்தே அமையும். தற்போது மானியமில்லா LPG கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மானியமில்லா LPG கேஸ் சிலிண்டர் விலையில் தற்போது ரூபாய் 61.5 ரூபாய் முதல் 65 ரூபாய் விலைக்குறைப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. டெல்லியில் 14.2 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் 61.5 ரூபாயகவும், மும்பையில் 62 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. சென்னையில் இந்த விலைக்குறைப்பு 64.5 ரூபாயாக இருக்கிறது. மேலும் இன்று முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பம் 12 கேஸ் வரையிலும் மானிய விலையில் வாங்கிகொள்ள மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டால் மானியமில்லாத கேஸ் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போது மானியமில்லாத கேஸ் சிலிண்டருக்கான விலைதான் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் விலைக்குறைப்பு செய்யப்படுவது இது இரண்டாவது தடவை என்பதும் குறிப்பிடத் தக்கது.