ரஜினி, டாம் குரூஸை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்.. 'லப்பர் பந்து' இயக்குனரின் பதிலடி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’கூலி’ படத்தை பார்த்து ரஜினியை அழைத்து சிவக்கார்த்திகேயன் பாராட்டியதாகவும், ‘மிஸன் இம்பாஸிபிள்’ படத்தை பார்த்து டாம் குரூஸை அழைத்து சிவகார்த்திகேயன் பாராட்டியதாகவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கு ’லப்பர் பந்து’ இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார். இது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஒரு திரைப்படம் வெளியாகும் போது திரை உலக பிரபலங்கள் அந்த படத்தை பார்த்து தங்களது சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருவதும் அதேபோல் படக்குழுவினர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவிப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
அதைத்தான் சிவகார்த்திகேயன் செய்து வந்த நிலையில் அவருக்கு எதிராக திடீரென இது குறித்த மீம்ஸ்கள் பதிவு செய்த பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ’கூலி’ படத்தை பார்த்து ரஜினியை அவர் அழைத்து பாராட்டியதாகவும், ‘மிஸன் இம்பாஸிபிள்’ படத்தை பார்த்து டாம் குரூஸை அழைத்து பாராட்டியதாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: “எங்கள மாதிரி ஒரு அறிமுக இயக்குநர் படம் ரிலீஸ் ஆகுறப்போ, திரையுலகுல இருக்குற ஸ்டார்ஸ் படம் பார்த்துட்டு படத்த பாராட்டி ஒரு ட்வீட்டோ இல்ல ஒரு பேட்டி குடுக்குறதோ அந்த படத்துக்கு எவ்ளோ பெரிய சப்போர்ட்-னு என்ன மாதிரி அறிமுக இயக்குநர்களுக்கே புரியும்.
சிவகார்த்திகேயன் சார் ரொம்ப நன்றி. நாங்க படம் பாக்க கூப்டதும் வந்து பாத்துட்டு நீங்க சொன்ன வார்த்தைகள் பட விளம்பரத்துக்கு மட்டுமல்ல எனக்கும் பெரிய சப்போர்ட். மீண்டும் ஒரு முறை நன்றி எனக்காக மட்டுமில்ல சார், என் போன்ற நிறைய அறிமுக இயக்குநர் சார்பாகவும்” என்று தெரிவித்துள்ளார்.
https://t.co/9sJMHH75Db pic.twitter.com/Es4YCbgQv4
— Tamizharasan Pachamuthu (@tamizh018) May 20, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com