லைகா - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 07 2016]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் '2.0' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்தியாவின் மிக அதிக பட்ஜெட் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் லைகா நிறுவனம் மேலும் சில தமிழ் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் 'கயல்' ஆனந்தி நடித்து வருகின்றனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் பொங்கல் தினத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பொங்கல் தினத்தில் பல முன்னணி நடிகர்கள் தாங்கள் நடித்த படங்கள் ரிலீஸ், ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ், டிரைலர் ரிலீஸ், டீசர் ரிலீஸ் என அறிவித்திருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷூம் தனது ரசிகர்கள் பொங்கல் ட்ரீட் தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தகது. ஜி.வி.பிரகாஷின் முதல் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார்

More News

பிரபுசாலமன் - தனுஷ் படத்தின் டைட்டில்

தங்கமகன்' படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதை அடுத்து தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது....

'தாரை தப்பட்டை' ரிலீஸுக்கு முன்பே முடிந்த சசிகுமாரின் அடுத்த படம்

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' என்ற படத்தில் சசிகுமார் நடித்து முடித்த அடுத்த நாளே அவருடைய அடுத்தபடமான 'வெற்றிவேல்' என்ற படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது...

'பசங்க 2' படத்திற்காக பரிசு பெற்ற பாண்டிராஜ்

'பசங்க' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ..

'தெறி' படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவல்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது...

சூர்யா-ஹரியின் 'சிங்கம் 3' படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு

சூர்யா-ஹரி இணைந்து 'சிங்கம்', சிங்கம் 2; ஆகிய இரண்டு தொடர் வெற்றி படங்கள் கொடுத்ததை அடுத்து இந்த படங்களின் அடுத்த பாகமான 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இன்று விசாகப்பட்டணத்தில் ஆரம்பமாகவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்..