லைகாவின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்: ரிலீஸ் எப்போது?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த அடுத்த திரைப்படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் ‘யூ’ கிடைத்துள்ள நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமாக தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரித்த ‘பன்னிகுட்டி’ படம் சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் இந்த படம் ஜூலை 8ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

யோகி பாபு மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அனுசரன் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கனவே யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் அதே போல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

அவங்களே ஹீரோயின் மாதிரி அழகா தான் இருக்காங்க: இளம் நடிகையின் அம்மா புகைப்படம் வைரல்!

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் வெற்றி படத்தில் நடித்த இளம் நடிகையின் அம்மாவின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த நடிகையின் அம்மாவே ஹீரோயின் மாதிரி

'விக்ரம்' ஓடிடி ரிலீஸில் திடீர் திருப்பம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 400 கோடி ரூபாய்க்கும்

பிகினி உடையில் பள்ளி மாணவி நடிகை: உருண்டு கீழே விழும் வீடியோ!

தமிழ் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகை தரையில் இருந்து உருண்டு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கீழே விழும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில்

மாதவன் கொடுத்த முத்தத்தால் மிரண்டு போன மச்சான்: வைரல் புகைப்படம்!

https://tamil.filmibeat.com/news/when-my-brother-in-law-freaked-out-when-i-sent-him-this-photo-of-my-wife-madhavan-s-hillarious-097180.html

மகனை ஆச்சரியத்துடன் பார்க்கும் உதயநிதி: அப்படி என்ன செய்தார் இன்பநிதி?

நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது மகனை ஆச்சரியத்துடன் பார்க்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.