லைகாவின் அடுத்த படத்தில் நயன்தாரா: முழுவிபரம் இதோ

  • IndiaGlitz, [Saturday,July 22 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' என்ற படத்தை சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ். இதே நிறுவனம் கமல்ஹாசனின் 'மருதநாயகம்' படத்தையும் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'கோகோ' என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

டார்க் காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினியின் '2.0' படத்தை தவிர லைகா நிறுவனம், 'சபாஷ் நாயுடு', 'இப்படை வெல்லும்' போன்ற படங்களையும் தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.