லைகாவின் அடுத்த படத்தில் ஷங்கர்-வடிவேலு

  • IndiaGlitz, [Tuesday,April 19 2016]

கடந்த 2006ஆம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் சமீபத்தில் வெளிவந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தை மீண்டும் சிம்புதேவன் இயக்குவார் என்றும் வடிவேலு முக்கியவேடத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜூ மகாலிங்கம் தனது சமூக வலைத்தளத்தில் 'வெள்ளைக்கொடிக்கு மீண்டும் வேளை வந்துவிட்டதா? என்று கூறியதோடு எஸ்.பிக்சர்ஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித் பிறந்த நாளில் கனெக்க்ஷன் ஆகும் மகேஷ்பாபு படம்

மகேஷ்பாபு நடித்த ஸ்ரீமுந்துடு-செல்வந்தன் படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வந்த 'பிரம்மோத்சவம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.....

'தெறி' சக்ஸஸ் பார்ட்டியில் விஜய்-அட்லி

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிய 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி....

கோலிவுட்டில் உருவாகும் இன்னொரு ஆக்சன் ஹீரோயின்

இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜாவுக்கும் நாயகியாக நடித்த வரலட்சுமிக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது....

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வடிவேலு வராதது ஏன்?

நேற்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்...

அழகு இல்லாவிட்டால் சூப்பர் ஸ்டார் ஆகமுடியாதா? ராம்கோபால் வர்மாவுக்கு ஒரு விளக்கம்

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா அவ்வப்போது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் கூறி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தோ அல்லது அவர்களது ரசிகர்களிடம் இருந்தோ கண்டனங்கள் பெறுவது வழக்கமான ஒன்றுதான்....