'PS 2' ரிலீஸில் அதிரடி முடிவெடுத்த லைகா.. 'துணிவு' கொடுத்த உற்சாகமா?

  • IndiaGlitz, [Saturday,April 08 2023]

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிசினஸ் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளிநாட்டில் லைகா நிறுவனம் சொந்தமாகவே ரிலீஸ் செய்ய அதிரடி முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்தின் ’துணிவு’ திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற லைகா நிறுவனம் அந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக புரமோஷன் செய்து மிகப்பெரிய லாபம் பெற்றது.

’துணிவு’ படம் கொடுத்த உற்சாகம் காரணமாக தற்போது ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தை சொந்தமாக லைகா நிறுவனம் வெளிநாடுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

More News

இன்னும் ஓரிரு நாளில் பிரசவம்.. பீச்சில் விளையாடும் பிரபல நடிகரின் மனைவி..!

இன்னும் ஓரிரு நாளில் பிரசவமாக இருக்கும் நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பிரபல நடிகரின் மனைவி பீச்சில் விளையாடும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கிரிக்கெட் திரைப்படத்தில் நயன்தாரா.. இரண்டு ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

கிரிக்கெட் கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'விஸ்வாசம்' அனிகாவை தெரியும்.. அனிகா ஃப்ரெண்ட் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் அஜித் - நயன்தாரா தம்பதியின் மகள் அனிகா சுரேந்திரன் நடித்திருப்பார் என்பதும் இவர் இன்ஸ்டாகிராமில் உச்சபட்ச கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து

ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மா, சகோதரியை பார்த்ததுண்டா? இதோ க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

ஜெயம் ரவி மனைவி பகிர்ந்த மேஜிக் புகைப்படங்கள்.. கண்கொள்ளா காட்சி என ரசிகர்கள் கமெண்ட்ஸ்..!

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள மேஜிக் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து