பொங்கல் ரிலீஸில் இன்னொரு லைகா படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,December 24 2023]

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் இன்னொரு படமும் அதே பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் ’லால் சலாம்’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ தனுஷின் ’கேப்டன் மில்லர்’ சுந்தர் சி யின் ’அரண்மனை 4 ’ ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படங்கள் அறிவிக்கப்பட்டபடி வெளியாகுமா? அல்லது ஒரு சில படங்கள் தள்ளிப் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இன்னொரு திரைப்படமான அருண் விஜய்யின் ’மிஷின் 1’ என்ற திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், அபி ஹாசன் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்

ஒரே நிறுவனத்தின் இரண்டு படங்கள் ஒரே தினத்தில் அதுவும் பொங்கல் மாதிரி திருவிழா நேரத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

டைட்டிலுக்கு அர்ச்சனா தகுதியில்லாதவர்.. இவர்தான் டைட்டில் வின்னர்: ஜேம்ஸ் வசந்தன்

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் தான் டைட்டில் வின்னர் யார் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு உள்ளது.  இதற்கு முந்தைய சீசன்களில்

இன்று எலிமினேஷன் ஆகும் சரவணன் விக்ரமுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டிவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் இறுதிப் போட்டிக்கு போட்டியாளர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதையும்

மாயவலை, வாடிவாசலை அடுத்து அமீர், வெற்றிமாறனின் இன்னொரு படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

அமீர் நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் 'மாயவலை' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி

தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதிக்கும் பாபி பாலச்சந்திரனின் 'பி டி ஜி யுனிவர்சல்'

உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபி பாலச்சந்திரன். இவர் நிறுவனங்கள் தங்கள் தரவு தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும்

நடிப்புல உங்கள தாண்டனும் சார்.. ஆசையை சொன்ன போட்டியாளருக்கு கமல் கூறிய பதில்..!

 நடிப்புல உங்கள தாண்டனும் சார் என்று போட்டியாளர் கூறியதற்கு கமல் கூறிய பதில் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் வெளியாகியுள்ளது.