close
Choose your channels

சரித்திர படம் மட்டுமல்ல, சாதனை படம்: பொன்னியின் செல்வனை சாதித்து காட்டிய சுபாஷ்கரன்!

Saturday, July 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் நேற்று வெளியானதிலிருந்து இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமரர் கல்கி வடிவமைத்த ஒவ்வொரு கேரக்டரையும் வாசகர்கள் தங்கள் மனதில் மிகப்பெரிய அளவில் கற்பனை செய்து வைத்திருப்பார்கள். அந்தக் கற்பனைக்கு ஈடு கொடுக்கும் அளவில் மணிரத்னம் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் என்பது நேற்றைய டீசரில் இருந்து தெரிய வந்தது.

இந்த படம் தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வகையிலான ஒரு படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை முதன்முதலாக மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 1958ஆம் ஆண்டு படமாக்க முயற்சி செய்தார். கல்கி அவர்களிடமிருந்து அந்த காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இந்த நாவலை படமாக்க உரிமை பெற்றார்.

எம்ஜிஆர், ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி, எம்என் நம்பியார், நாகேஷ் உள்பட பலர் நடிப்பதாக இருந்த இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென எம்ஜிஆர் ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் ஆறு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மீண்டும் பொன்னியின் செல்வன் முயற்சியை எடுக்கவில்லை.

அதேபோல் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்து ஆரம்ப கட்டத்திலேயே அந்த முயற்சி கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. மணிரத்னம் அவர்களே மூன்று முறை இந்த படத்தை எடுக்க முயற்சித்ததாக நேற்றைய டீசர் வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். இந்த படம் பலமுறை முயற்சித்து கைவிடப்பட்டதற்கு முக்கிய காரணமாக இந்த படத்தை முழுவதும் எடுத்து முடிக்க மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது.

இவ்வாறு பல பிரபலங்கள் ‘பொன்னியின் செல்வன்’ முயற்சியை கைவிட்ட நிலையில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்கள் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து சாதித்து காட்டியுள்ளார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுக்கும் திறன் உள்ள மிகச்சில தயாரிப்பாளர் ஒருவரான சுபாஷ்கரன் அவர்கள் ’பொன்னியின் செல்வன்’ கதை மீது உள்ள நம்பிக்கை, மணிரத்னம் அவர்களின் திறமை மீது இருந்த நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக மிகப் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு என பல்வேறு பிரச்சினைகள் இடையில் ஏற்பட்ட போதிலும் இந்த படத்தை கைவிடாமல் தற்போது வெற்றிகரமாக முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் இல்லாமல் இந்த படம் உருவாகி இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

இந்த நிலையில் நேற்று ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டீசர் வெளியான பிறகு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளதால் இந்த படத்தை மிகச் சிறந்த அளவில் புரமோஷன் செய்ய வேண்டும் என்றும் சுபாஷ்கரன் தனது குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் ஒவ்வொரு இந்தியனையும் சென்று சேர வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமின்றி இந்தியிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதால் நாடு முழுவதும் இந்த படத்தின் புரமோஷனை மிகவும் பிரமாண்டமான அளவில் நடத்த வேண்டும் என்று சுபாஷ்கரன் தனது குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இந்திய திரையுலகமே இதுவரை பார்க்காத ஒரு பிரம்மாண்டமான வெற்றியாக ’பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.