ஜேசன் சஞ்சய் படம் குறித்த வதந்தி.. ஒரே ஒரு ட்வீட்டில் அடித்து நொறுக்கிய லைகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் அந்த படம் ட்ராப் என்று கடந்த சில வாரங்களாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லைகா நிறுவனம் ஒரு ட்விட் பதிவு செய்துள்ளது.
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா இயக்குனருக்கான படிப்பை முடித்து இந்தியா திரும்பிய நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்கு பின் இந்த படம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பாக ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க கவின் உள்பட ஒரு சில நடிகர்கள் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லைகா - ஜேசன் சஞ்சய் படம் ராப் என்று வதந்திகள் வெளியான நிலையில் இன்று ஜேசன் சஞ்சய்க்கு லைகா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதில், ’வளர்ந்து வரும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்கள் பாதை வெற்றியாலும், முடிவில்லாத சாதனைகளாலும் நிரப்பப்படும். உங்கள் கனவுகளை நனவாக்குகிறோம்’ என்று பதிவு செய்துள்ளது.
இதனை அடுத்து ஜேசன் சஞ்சய் - லைகா திரைப்படம் உறுதி என்று கூறப்பட்டுள்ளதோடு, இது குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy Birthday to the emerging Director #JasonSanjay 🎉 May your path be filled with success and endless achievements. 🤗 Here’s to directing your dreams into reality! 🎬#HBDJasonSanjay #JasonSanjay pic.twitter.com/PIuKLK0U6l
— Lyca Productions (@LycaProductions) July 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout