close
Choose your channels

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் லிடியன் நாதஸ்வரம்!

Saturday, June 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' என்ற ரியாலிட்டி ஷோவில் சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாணவர் லிடியன் நாதஸ்வரம் என்ற 12 வயது சிறுவர் கலந்து கொண்டு அதிவேகமாக பியானோ வாசித்து 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' என்ற பட்டம் பெற்று, தமிழகத்திற்கும் குரு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் புகழ்பெற்று தந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் லிடியன் நாதஸ்வரம் தற்போது ஒரு படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முதல்முறையாக இயக்கவுள்ள 'Barroz' என்ற திரைப்படம்.

மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்து இயக்குனராக அறிமுகமாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக மோகனன் என்பவர் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து இசையமைப்பாளராக லிடியன் நாதஸ்வரம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.