அஜித்தின் 'விஸ்வாசம்' படம் குறித்து மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பிய பாடலாசிரியர் அருண்பாரதி

  • IndiaGlitz, [Monday,July 13 2020]

அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான திரைப்படம் 'விஸ்வாசம்’.ரூபாய் 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 160 முதல் 200 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்பட்டது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் தற்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று மாலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'விஸ்வாசம்’ திரைப்படம் ஒளிபரப்பானது. இந்த படத்தை முதல் முறையாக பார்ப்பதுபோல் ஏராளமானோர் பார்த்து சமூக வழக்கங்களிலும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி 'விஸ்வாசம்’ என்ற ஹேஷ்டேக் நேற்று மாலை தொடங்கி இப்பொழுதும் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொலைக்காட்சியில் மூன்றாவது முறையாக ஒளிபரப்பப்பட்டபோதிலும் 'விஸ்வாசம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பாடலாசிரியர் அருண்பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆச்சரியத்துடன் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? என குழப்பமே வந்து விட்டது. ஒவ்வொரு முறை  தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போதும் நேற்றுதான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும், தொலைபேசியில் அழைத்து பாராட்டுவதும் மிகுந்த உற்சாகம் தருகிறது. அன்பு நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடலாசிரியர் அருண் பாரதி 'விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டங்கா டங்கா டங்கா’ என்ற பாடலை எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலை செந்தில்-ராஜலட்சுமி பாடியுள்ளனர் என்பதும்  இந்தப்பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 

More News

சினிமாவுக்கு வந்ததால் நான் இழந்தது இதுதான்: விஜய்சேதுபதி பேட்டி

சினிமாவுக்கு வந்ததால் பெயர், புகழ் , பணம் உள்பட பலவற்றை நான் பெற்றிருந்தாலும் ஒன்றை மட்டும் இழந்து விட்டேன் என்று விஜய் சேதுபதி தனது சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 

மதுரை ராமு தாத்தாவுக்கு புகழாராம் சூட்டிய விவேக்!

மதுரையில் ராமு தாத்தா ஹோட்டல் என்றால் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். மிக குறைந்த விலையில் தரமான உணவை அந்த பகுதி மக்களுக்கு அவர் அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

திரைக்கதையின் இலக்கணத்தையே மாற்றியது: அஜித் படம் குறித்து இயக்குனர் திரு!

அஜித் தேவயானி நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையில் தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் உருவான திரைப்படம் 'காதல் கோட்டை'. கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்காக

சென்னையில் குறைந்து, மற்ற மாவட்டங்களில் உயரும் கொரோனா: பரபரப்பு தகவல்

கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் மற்ற மாவட்டங்களில் அதிகரித்து கொண்டே வருவது கவலை அளித்துள்ள நிலையில் இன்றும் சென்னை தவிர பிற மாவட்டங்களில்

கமல், ரஜினியை அடுத்து ரூ.2 லட்சம் பொன்னம்பலத்திற்கு கொடுத்து உதவிய பிரபலம்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனை