பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்

  • IndiaGlitz, [Thursday,May 25 2017]

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் நா.காமராசர் காலமானார். அவருக்கு வயது 75. சென்னையில் சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது. கோலிவுட் திரையுலகினர் மறைந்த பழம்பெரும் பாடலாசிரியருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த நா.காமராசர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் படித்தார். மாணவ பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். தமிழ் மேல் தீவிர பற்றுள்ள நா.காமராசன் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் சில ஆண்டுகள் பணியாற்றியவர்.

பின்னர் எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அவர் நூற்றுக்கணக்கான திரையிசை பாடல்களை எழுதினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் நன்மதிப்பை பெற்ற அவர் அவரது ஆட்சி காலத்தில் அதிமுகவில் ஒருசில பதவிகளிலும் இருந்துள்ளார்.

மறைந்த நா.காமராசன் அவர்களுக்கு லோகமணி என்ற மனைவியும், தைப்பாவை என்ற மகளும், திலீபன் என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான தேனியில் இன்று மாலை நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

More News

'தலைவர் 161' படத்தின் மாஸ் டைட்டில் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'தலைவர் 161' திரைப்படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்

ரஜினி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்: தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்களை சந்தித்தபோது தெரிவித்த ஒருசில அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் சுனாமியை கிளப்பிவிட்டது. அந்த சுனாமி இன்று வரை சுழன்றடித்து வருகிறது. தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை ரஜினியின் அரசியல் முடிவை விமர்சிக்காதவர்களே இல்லை என்று கூறும் வகையில் உள்ளது...

அரசியல் களத்தில் இறங்குகிறாரா வெங்கட்பிரபு?

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தில் 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஓர் ஆண்டு ஆட்சி: இமெயில் அனுப்பி பாராட்டிய கமல்ஹாசன்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்று ஓரு ஆண்டு நிறைவு பெற்றது என்பதை அனைவரும் அறிவோம்

ஏ.ஆர்.ரஹ்மான் என்னை மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து சென்றுவிட்டார். சச்சின்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் வெள்ளி அன்று தமிழ் உள்பட இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியாகவுள்ளது.