நாட்படு தேறல் தேறல்....! வைரமுத்து-வின் மனதை ரணமாக்கும் தாலாட்டு பாடல்....!

பாடலாசிரியர் வைரமுத்து அவர்களின் நாட்படு தேறல் என்ற தொகுப்பின் கீழ், 8-ஆம் பாடலான, தாலாட்டுப்பாடல் வெளியானது.

கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ், 100 பாடல்களை உருவாக்கியுள்ளார். இப்பாடல்களை 100 இசையமைப்பாளர்கள் இசையமைத்து, 100 பாடகர்கள் வைத்து பாடப்பட்டு, 100 இயக்குனர்களை வைத்து இயக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.  கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கலைஞர் மற்றும் இசையருவி சேனல்களில், இத்தொகுப்பின் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் தற்போது 8-ஆவது பாடலான, தாலாட்டுப்பாடல் வெளியாகி உள்ளது.  கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை இணைத்து, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய, மனதை ரணமாக்கும் தாலாட்டுப்பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

இதுகுறித்து வைரமுத்து அவர்கள் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

நாட்படு தேறல்
எட்டாம் பாடல்
 ஒரே பாட்டுக்குள் மூன்று தாலாட்டு.
1960 - 1990 - 2020 மூன்று தலைமுறைகளின் வாழ்வியல் மாற்றங்கள்
பி.சுசீலா - சித்ரா - ஹரிணி
இது ஒரு சோதனை முயற்சி
என் திரைப்பயணத்தில் இப்படியொரு தாலாட்டு எழுதியதில்லை.
இதில் ஏதோ ஒரு தலைமுறையில் நீங்களும் இருப்பீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடல் வரிகள்:

More News

அந்த காட்சியைப் பார்த்து எனக்குக் கண்ணீரே வந்து விட்டது: கவிஞர் தாமரையின் உணர்ச்சிபூர்வ பதிவு!

சென்னை மாநகராட்சியில் 'தமிழ் வாழ்க' என்ற பெயர் பலகையை மீண்டும் பார்த்தவுடன் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது என கவிஞர் தாமரை தனது பேஸ்புக்கில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்

மூளையில்லாத வேலையற்றவர்கள்: ராதிகா சரத்குமாரின் ஆவேச பதிவு!

டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரால் போலி கணக்குகள் உருவாக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்

ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா என்பதும் இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'டெடி' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

3வது முறையாக வெற்றி இயக்குனருடன் இணையும் மாதவன்? 

பிரபல இயக்குனரின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் மாதவன் மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

31 வயது நடிகருடன் 'மிஸ் ஷெட்டி' ஆகும் அனுஷ்கா ஷெட்டி!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி 31 வயது இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது