பலருக்கும் அவர் நம்மவர்; எனக்கு நல்லவர்: கமலுக்கு வைரமுத்து வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,November 07 2020]

உலக நாயகன் கமல்ஹாஸன் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றார். திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் அவருக்கு தொடர்ந்து நேரிலும் தொலைபேசி மூலமும் சமூக வலைதளங்கள் மூலமும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை கமலஹாசன் அவர்கள் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையுலகினர் பலர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனுக்கு கவிதை வடிவில் ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது.

பிறந்தநாள் என்பது
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.

இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.

தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.

பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!

More News

தலைமுடியில் கின்னஸ் சாதனை… அசத்தும் நம்ம ஊரு பெண்!!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி கின்னஸ் சாதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த வாரம் வெளியேற்றப்படுகிறாரா சுரேஷ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

சாதனை படைத்த ஜோபைடன்: அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம்!

அமெரிக்க ஜனாதிபதி பதவி என்பது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகத்தையே வழிகாட்டும் ஒரு பதவியாகத்தான் பார்க்கப்படுகிறது.

பாக்கத்தான போற இந்த கோஹ்லியோட ஆட்டத்த... : 'பேய்மாமா' டிரைலர்

யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'பேய்மாமா' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

WhatsApp மூலம் பணப் பரிமாற்றமா??? ஆச்சர்யமூட்டும் புது அப்டேட்!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது