அன்னையர் தினத்திற்கு முந்தைய நாளில் அன்னையை இழந்த வைரமுத்து: பிரபலங்கள் இரங்கல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் தங்கள் அன்னையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் என்பதும், அவை வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று அன்னையர் தினம் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நேற்று கவிப்பேரரசு வைரமுத்து தனது அன்னையை இழந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த வைரமுத்துவின் அன்னை அங்கம்மாள் அவர்கள், நேற்று மாலை காலமானார்.
இது குறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில், “என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதி சடங்குகள் தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் ஞாயிறு மாலை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அன்னையை இழந்த வைரமுத்துக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
என்னைப் பெற்ற அன்னை
— வைரமுத்து (@Vairamuthu) May 10, 2025
திருமதி அங்கம்மாள் அவர்கள்
இன்று சனிக்கிழமை மாலை
இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்தோடு
அறிவிக்கிறேன்
இறுதிச் சடங்குகள்
தேனி மாவட்டம் வடுகபட்டியில்
நாளை ஞாயிறு மாலை
நடைபெறும் pic.twitter.com/bbBpOeFHjx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com