என்னை கேட்காமல் பயன்படுத்திய பல்லவிகள்.. வைரமுத்து அடுக்கிய பெரிய லிஸ்ட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலகில் தன்னுடைய பாடலை தன்னிடம் உரிமை கேட்காமல் பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக அஜீத் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
ஆனால் அதே நேரத்தில் தேனிசை தென்றல் தேவா தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தியதில் தனக்கு பெருமை தான் என்றும் இதற்காக நான் வழக்கு எல்லாம் போடப் போவதில்லை என்றும் தெரிவித்தார். அதேபோல் நடிகர் தியாகராஜனும் தன்னுடைய ’மலையூர் மம்பட்டியான்’ படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்தியதற்கு நன்றி என்றும் இந்த பாடலை மீண்டும் டிரண்டாகியதற்கு நான் தான் ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் தாராளம் மனப்பான்மையுடன் நடந்து கொண்டார்.
இந்த நிலையில் கவியரசு வைரமுத்து தன்னுடைய பல்லவியை பலர் டைட்டிலாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் ஒரு நாகரிகத்திற்காக கூட தன்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை என்றும் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது
அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா...
பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,
பனிவிழும் மலர்வனம்,
வெள்ளைப் புறா ஒன்று,
பூவே பூச்சூட வா,
ஈரமான ரோஜாவே,
நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம்,
மின்சாரக் கண்ணா,
கண்ணாளனே,
என்னவளே, உயிரே,
சண்டக்கோழி,
பூவெல்லாம் கேட்டுப் பார்,
தென்மேற்குப் பருவக்காற்று,
விண்ணைத் தாண்டி வருவாயா,
நீ தானே என் பொன் வசந்தம்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
தங்கமகன்
இப்படி இன்னும் பல...
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக
இவர்கள் யாரையும்
நான் கடிந்து கொண்டதில்லை
காணும் இடங்களில் கேட்டதுமில்லை
செல்வம் பொதுவுடைமை
ஆகாத சமூகத்தில்
அறிவாவது
பொதுவுடைமை ஆகிறதே
என்று அகமகிழ்வேன்
ஏன் என்னைக் கேட்காமல்
செய்தீர்கள் என்று கேட்பது
எனக்கு நாகரிகம் ஆகாது
ஆனால்
என்னை ஒருவார்த்தை
கேட்டுவிட்டுச் செய்வது
அவர்களின்
நாகரிகம் ஆகாதா?
என்னுடைய
— வைரமுத்து (@Vairamuthu) June 9, 2025
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது
அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா...
பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments