'வேல்' குறித்து வேறுவிதமான விளக்கம் அளித்த வைரமுத்து!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக வேல் முக்கிய இடம் பிடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் சமீபத்தில் வேல் யாத்திரை நடத்தினார் என்பதும், அதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே

அதேபோல் சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வேலை கையில் பிடித்துக்கொண்டு கொடுத்த போஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேல் குறித்து வேறுவிதமான விளக்கம் ஒன்றை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

வேல் என்பது கடவுளின்
கைப்பொருள் மட்டுமில்லை

இரும்புக் காலத்தில்
மனிதன் கண்டறிந்த
வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்

தமிழர்களின்
ஆதி ஆயுதம் வேல்

அது வேட்டைக்கும் உரியது
வழிபாட்டுக்கும் உரியது
போருக்கும் உரியது
மற்றும்
யாருக்கும் உரியது

More News

வெள்ளை உடையில் தேவதை போல் மாறிய லாஸ்லியா: கொண்டாடும் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அந்த சீசனின் மற்றொரு போட்டியாளரான கவின் உடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் இதன் காரணமாக இருவருக்கும் ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே

மீண்டும் 4 மணி ரசிகர்களை குஷிப்படுத்திய ஷிவானி: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரியாக 4 மணிக்கு கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் ஷிவானி நாராயணன்

எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையிலே காத்திருந்த நாய்… நெகிழ்ச்சி சம்பவம்!

துருக்கி நாட்டில் வயதான ஒருவர்  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டார்.

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா: வைரல் புகைப்படங்கள்!

https://www.indiaglitz.com/suriya-attending-fan-hari-and-priya-wedding-navarasa-suriya-40-tamil-news-278972

கீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பிரபல மலையாள பட தயாரிப்பாளர் என்பது பலரும் அறிந்ததே.