அடுத்த வாரம் முதல் கிக்கை ஏற்றுகிறார் ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Wednesday,March 02 2016]

கோலிவுட் திரையுலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பாலன்ஸ் செய்து வரும் ஜி.வி,.பிரகாஷ், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்திற்கு இசையமைத்து கொண்டே, லைகா போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள KIK என்னும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் அதாவது மார்ச் இரண்டாம் வாரம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இந்த படத்தை தயாரிக்கின்றார்.

மேலும் புருஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களிலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பாண்டியராஜ் இயக்கும் கேடிபில்லா கில்லாடி ரங்கா' படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

More News

ஷங்கரின் '2.0;வில் புகுந்த ராணுவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்திற்காக பலகோடி மதிப்புள்ள பிரமாண்ட...

சென்னை, மலேசியாவை அடுத்து காஷ்மீர் செல்லும் விக்ரம் குழுவினர்

முதல்முறையாக விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் சென்னை...

'ஒருநாள் கூத்து' படத்துடன் இணைந்த 'புரூஸ்லீ'

கடந்த வாரம் அருள்நிதி நடித்த 'ஆறாவது சினம்' படத்தை ரிலீஸ் செய்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், வரும் வெள்ளியன்று...

ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்கிறதாம் சூர்யாவின் '24' டீசர்

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள '24' படத்தின் டீசர் இவ்வார இறுதியில் வெளிவரும் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த டீசர் சுமார் ஒரு நிமிடம் ஓடுவதாகவும்...

சீமான் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி

கோலிவுட் திரையுலகில் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சீமான் கடந்த 2011ஆம் ஆண்டு 'நாம் தமிழர்' என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.....