'தல' தோனி இன்றும் மக்கள் கேப்டன் தான். ஒரு நெகிழ வைக்கும் சம்பவம்

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

திரையுலகில் உள்ள தல நடிகராக மட்டுமின்றி நல்ல மனிதநேயமிக்கவராக இருப்பது போலவே கிரிக்கெட் தல என்று அழைக்கப்படும் தோனி, சிறந்த கேப்டனாக இருந்து அனைவரின் மனதையும் வென்றது மட்டுமின்றி சிறந்த மனிதர், நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது சமீபத்திய நெகிழ வைக்கும் சம்பவங்களால் தெரியவந்துள்ளது.
தல தோனி சமீபத்தில் ஜார்கண்ட் அணியினர்களுடன் போட்டி ஒன்றில் விளையாட ரயிலில் சென்று, அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார் என்பதை தெரிந்ததே. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவுடன் டிரஸ்ஸிங் அறையில் அவர் சக வீரர்களுடன் தல தோனி பேசி கொண்டிருந்தபோது தனது பழைய நண்பர் ஒருவர் தன்னை பார்க்க வந்திருக்கின்றார் என்று தெரிந்தவுடன் உடனே அவரை கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தும் தோனி தன்னை ஞாபகப்படுத்தி வரவேற்றதில் அந்த நண்பர் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை
காராக்பூரில் டீக்கடை வைத்திருக்கும் தாமஸ் என்ற அந்த நண்பரை உடனே தான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு உடன் அழைத்து சென்று அவருக்கு ஸ்பெஷல் உணவு வாங்கி கொடுத்துள்ளார். மேலும் இந்த பயணத்தில் அவர் தனது பல பழைய நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். ஒவ்வொருவருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்விக்க செய்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து தோனியின் பால்ய நண்பர் தாமஸ் கூறியபோது, 'தோனி காராக்புரில் இருந்தபோது தினமும் இரண்டு அல்லது மூன்று முறை என்னுடைய டீக்கடைக்கு வருவார். பலமுறை அவருக்கு நான் சூடான பால் பருக அளித்துள்ளேன். இன்றைய சந்திப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. நான் நேராக ஊருக்கு சென்று முதல் வேலையாக என்னுடைய டீக்கடைக்கு 'தோனி டீ ஸ்டால்' என்று மாற்ற உள்ளேன்' என்று கூறியுள்ளார். தல தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி போனாலும் மக்கள் மனதில் அவர் இன்றும் என்றும் கேப்டன் தான்.

More News

மீண்டும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள். என்ன நடக்குது சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில்?

இந்த பிரச்சனை ஓய்ந்து ஒருசில நாட்கள் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையிலான புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சில முன்னணி பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் பதிவாகியுள்ளது.

மறு திருமண செய்தி குறித்து இயக்குனர் விஜய் விளக்கம்

பிரபல இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் விவாகரத்து வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்து, இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பல ஊடகங்களில் விஜய் மறு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இன்னும் மனதளவில் விஜய்யை விரும்பும் அமலாபால் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும&#

சினிமாவை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை. குஷ்பு

தமிழ் சினிமா, தமிழக அரசியல் என பிசியாக இருந்த குஷ்பு, சமீபத்தில் கேரளாவுக்கு சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக பேசிய பேச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. நடிகை பாவனா பாலியல் தொல்லை குறித்து பேசிய குஷ்பு, பாவனாவை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சி செī

100 ஆண்டு சினிமா வரலாற்றில் 'கபாலி' செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல், மொத்த வசூல் ஆகியவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வசூல். ஒருசிலர் இந்த படம் தோல்வி என்றும், இந்த படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் என்று கூறி வந்தாலும் இதுவொரு மாபெரும் வ

பெப்சி-கோக் எதிர்ப்பு எதிரொலி. ஓட்ஸ் பக்கம் பார்வையை திருப்பும் வெளிநாட்டு நிறுவனங்கள்

பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை கிட்டத்தட்ட இந்தியர்கள் பலர் புரிந்து கொண்டதால் அதன் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் சுத்தமாக பெப்சி, கோக் விற்பனை இல்லை என்றாகிவிட்டது...