'சோலோவாக ரிலீஸ் ஆகிறதா ரஜினியின் 'அண்ணாத்த': பின்வாங்கும் தீபாவளி படங்கள்!

வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ’மாநாடு’ மற்றும் விஷாலின் ’எனிமி’ ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு திரைப்படம் தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படம் சிம்புவின் ’மாநாடு’ என்பதும் இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திரை உலகிற்கும் திரைப்பட ரசிகர்களுக்கு வணக்கம். நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கு இடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்கு காத்திருக்கிறான் மாநாடு. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்து விட அனைத்தும் செய்யப்பட்டு செய்யப்பட்டுவிட்டது

யாரோடும் போட்டி என்பதல்ல, ஒரு விழா நாளில் மக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதை கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவு எடுத்தோம். போட்டி என்ற வீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அப்படிப் பார்ப்பது வியாபார புத்திசாலித்தனம் அல்ல. நமது ’மாநாடு’ படம் நன்றாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது, வந்து பார்ப்போம் என இறங்கி விடலாம்.

ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது. அதேபோல் விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும், நாட்டம் அடைய கூடாது என்று சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்

ஆதலால் ’மாநாடு’ தீபாவளிக்கு வெளிவராமல் சற்றுத்தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும். ’மாநாடு’ தீபாவளி வெளியீட்டில் வெளியேறுகிறது. வெளியாகும் படங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்க போகும் உங்கள் அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்

இதேபோல் தீபாவளி ரிலீஸ் திரைப்படம் என்று கூறப்பட்டு வரும் ’எனிமி’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? அல்லது ’மாநாடு’ போல் பின்வாங்குமா? ‘அண்ணாத்த’ சோலோவாக ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளரை டார்ச்சர் செய்யும் அபிஷேக்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று ஒரு போட்டியாளரை வெளியேற்ற நாமினேஷன் படலம் நடக்கும் என்பது அறிந்ததே. அந்த வகையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில்

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்!

வரும் தீபாவளி அன்று ஏற்கனவே ரஜினி, சூர்யா, சிம்பு மற்றும் விஷால் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகரின் படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் இரண்டு கட்ட

ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்தாரா சமந்தா? என்ன காரணம்?

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'லயன்' படத்தில் நயன்தாரா நடித்து வரும் கேரக்டரில் முதலில் சமந்தா தான் தேர்வு செய்யப்பட்டு இருந்ததாகவும்

உயிரோடு புதைத்த மக்கள்… கரைபுரளும் வெள்ளம்… கேரளாவில் தொடரும் அவலம்!

கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் தெற்கு பகுதியின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு,