close
Choose your channels

கேரக்டருக்கு ஏற்ற தேதிக்காக காத்திருக்கும் 'மாநாடு' படக்குழு: ரிலீஸ் எப்போது?

Thursday, March 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் அப்டேட்டுக்களை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விரைவில் ரிலீஸ் தேதியையும் அப்டேட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிந்தாலும் ரம்ஜான் பண்டிகை தேதிக்காக படக்குழுவினர் காத்திருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிம்புவின் கேரக்டர் அப்துல் காலிக் என்பதால் இஸ்லாமிய பண்டிகையின்போது இந்த படத்தை வெளியிட்டால் படத்திற்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று படக்குழுவினர் கருதுவதாக கூறப்படுகிறது. எனவே ரம்ஜானை ஒட்டி இந்த படத்தின் ரிலீஸ் தேதி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படம் சிம்புவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.