close
Choose your channels

'உண்மையை அப்புறம் சொல்றேன்': 'மாறன்' இயக்குனரின் சர்ச்சை பதிவு!

Saturday, March 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாறன்’ திரைப்படம் நேற்று மாலை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவு செய்து கொண்டிருந்த போது திடீரென இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூஉக வலைத்தள பக்கத்தில் ’உண்மையை அப்புறம் சொல்றேன்’ என்று பதிவு செய்தார்.

இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென அந்த பதிவை அவர் டெலிட் செய்துவிட்டார். ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென கார்த்திக் நரேன் விலகி விட்டதாகவும் தனுஷே மீதி படத்தை இயக்கினார் என்றும் ஒரு வதந்தி உருவான நிலையில், ‘தற்போது உண்மையை அப்புறம் சொல்றேன்’ என இயக்குனர் கார்த்திக் நரேன் சர்ச்சைக்குரிய ஒரு பதிவை செய்து டெலிட் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இயக்குனர் கார்த்திக் நரேன் சொல்லப்போகும் உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.