close
Choose your channels

மாரி செல்வராஜின் அடுத்த படம் விளையாட்டு வீரரின் பயோபிக்கா?

Monday, April 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் இரண்டே நாளில் சுமார் ரூ.25 கோடிக்கு மேலாக வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படம் தமிழகத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றும் இந்த படத்திற்காக விக்ரம் விரைவில் கபடி விளையாட்டு பயிற்சியில் ஈடுபட போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றதன் பின்னணியில் தான் இந்த படத்தின் கதை இருப்பதாகவும் முதன்முதலாக மாரிசெல்வராஜ் ஒரு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

’பரியேறும் பெருமாள்’, ’கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படம் இது என்பதும், அதேபோல் ’ஆதித்யா வர்மா’ மற்றும் ’சியான் 60’ படங்களை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் மூன்றாவது படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.