'விக்ரம்' படத்தின் இடைவேளையில் எந்த படத்தின் டிரைலர் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் முதல் நாளுக்கான அத்தனை காட்சிகளின் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் கமல்ஹாசனே நாளை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதிகாலை 4 மணி காட்சியை ரசிகர்கள் மத்தியில் பார்க்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் 'விக்ரம்’ படத்தின் இடைவேளையில் சிபிராஜ் நடித்த ’மாயோன்’ படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ’மாயோன்’ படத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக பார்க்கப்படுகிறது.

சிபிராஜ் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாயோன்’ திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றது என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆளரவமற்ற கோவில் ஒன்றில் மர்மமான நிகழ்வுகள் நடைபெறும் நிலையில் அந்த நிகழ்வுகளை கண்காணிக்க செல்லும் கூட்டத்திற்கு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை. சிபிராஜ் ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் 'விக்ரம்’ படத்தின் இடைவேளையில் வெளியாக இருப்பதால் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அந்த பணத்தை மட்டும் மகளுக்காக சேமித்து வச்சுருக்கேன்: மிஷ்கின்

பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிப்பதில் இருந்து கிடைக்கும் பணத்தை தனியாக தனது மகளுக்காக சேமித்து வைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன்: போலீசில் வாக்குமூலம் கொடுத்த பிரபல நடிகர்!

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன் என நடிகை அளித்துள்ள பாலியல் புகார் குறித்து போலீசாரிடம் பிரபல நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் தள்ளிப்போக இதுதான் காரணம்: பிரியா பவானி சங்கர்

 நடிகை பிரியா பவானி சங்கர் தனது திருமணம் தள்ளி போனதற்கான காரணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரசன்னா- ரெஜினாவின் 'ஃபிங்கர்டிப்' வெப்தொடர் 2வது சீசன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது.