close
Choose your channels

'மதயானை கூட்டம்' பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு!

Thursday, February 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி, கலையரசன் உள்பட பலரது நடிப்பில் ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’மதயானை கூட்டம்’. கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. விக்ரம் சுகுமாரன் இயக்கும் அடுத்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக சுகுமார் என்பவரும் கலை இயக்குனராக ராஜீவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் நடிகர் நடிகைகள் உள்பட மற்ற விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.