close
Choose your channels

'தலைவி 2' எடுத்தால் ரஜினி சொன்ன விஷயங்கள் இணைக்கப்படும்: மதன் கார்க்கி 

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தலைவி’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக ரஜினி கூறிய சுவாரசியமான விஷயங்கள் அதில் சேர்க்கப்படும் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ’தலைவி’ படத்தின் வசனகர்த்தா மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’தலைவி’ படத்தின் வசனகர்த்தா மதன்கார்க்கி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சமீபத்தில் தான் ரஜினியை சந்தித்ததாகவும் அப்போது ’தலைவி’ படம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் சில சுவாரசியமான விஷயங்களை தெரிவித்ததாகவும், ஒருவேளை ’தலைவி 2’ படம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக அந்த படத்தில் அவர் சொன்ன காட்சிகள் இடம்பெறும் என்றும் கூறினார். ரஜினி அப்படி என்ன சுவாரஸ்யமான விஷயங்களை ஜெயலலிதா குறித்து கூறி இருப்பார் என்பதை ’தலைவி 2’ படம் வந்தால் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’தலைவி’ படம் ஒரு அரசியல் படமாக நாங்கள் பார்க்கவில்லை என்றும் ஆண்கள் மட்டுமே அரசியலில் ஜெயிக்க முடியும் என்ற சூழலில் ஒரு பெண் தனியாக எப்படி வெற்றி பெற்றார் என்பதை சொல்லும் படமாகத்தான் ’தலைவி’ இருக்கும் என்றும் மதன் கார்க்கி அந்த பேட்டியில் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos