ஜிஎஸ்டி, கேளிக்கை வரி: மதன்கார்க்கியின் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,July 03 2017]

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற அறிவித்துதான் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால் ஒருசில மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி மாநில அரசின் வரியும் விதிக்கப்படுவதால் இரட்டை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக திரைத்துறையினர்களுக்கு இந்த இரட்டை வரிவிதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல பாடலாசிரியர் மதன்கார்க்கி, கேளிக்கை வரியில் மாற்றம் கொண்டு வரும் வரை தன் சம்பளத்தில் 15% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

மதன்கார்க்கியின் இந்த அறிவிப்பு தயாரிப்பாளர்களுக்கு சற்று நிம்மதியை தந்தாலும், இந்த பிரச்சனை தீர்க்கப்படும் வரை மதன் கார்க்கியை போலவே நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களும் சம்பளத்தை குறைக்க முன்வந்தால் தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

புளுகுமூட்டை சினேகன், நாட்டாமை நமீதா! பட்டப்பெயர் வைத்து வெளியேறிய அனுயா

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அனுயா வெளியேற்றப்பட்டார்...

'இவன் தந்திரன்' ஓப்பனிங் வசூல் விபரம்

கவுதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் நிலைமையை மிக அழகாக எடுத்து கூறியதால் கடந்த மூன்று நாட்களாக திரையரங்குகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்க

'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள 'அதாகப்பட்டது மகாஜனங்களே' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது...

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்: இயக்குனர் ஷங்கர் கோரிக்கை

தமிழ் திரையுலகம் கடந்த சில வருடங்களாகத்தான் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தயாரிப்பாளர்கள் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து பெரிய பட்ஜெட் படங்களை துணிச்சலுடன் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்...

SIIMA விருது 2017: விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள் பட்டியல்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா அபுதாபியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலக சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது...