close
Choose your channels

இசையமைப்பாளராக மாறுகிறாரா மதன்கார்க்கி?

Saturday, November 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை வாரிசும் பிரபல கவிஞருமான மதன்கார்க்கி பாடல் எழுதுவதோடு, 'பாகுபலி' உள்பட ஒருசில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய அடுத்த அவதாரம் இசையமைப்பாளர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கவுள்ள 'காஞ்சனா 3' படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவர் மதன்கார்க்கி என்றும் இந்த படத்திற்காக அவர் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து தயாராக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த ஆறில் ஒருவர் மதன்கார்க்கியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஓவியா நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.