close
Choose your channels

மாதவன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

Sunday, October 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம் வேதா’ வெற்றி படத்திற்கு பின் மாதவன் தற்போது அனுஷ்காவுடன் நிசப்தம்’ மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ராக்கெட்டரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரு படங்களின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் ‘நிசப்தம்’ திரைப்படத்தில் மாதவன் ‘அந்தோணி’ என்ற இசைக்கலைஞர் கேரக்டரில் நடித்திருப்பதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவது அக்டோபர் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள ‘நிசப்தம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் கோபிசுந்தர் இசையில் உருவாகி வரும் இந்த படத்த்தை பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

மாதவன் மற்றும் அனுஷ்கா ஆகிய இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு ‘ரெண்டு’ என்ற படத்தில் நடித்த பின்னர் 13 வருடங்களுக்கு முன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.